அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

29 மே, 2011

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான ஹஸன் அலியை தோற்கடித்தவரும், ஈழ நண்பருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு மனிதம் பாராட்டு


பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அன்மையில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய இந்திய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான ஹஸன் அலியின் பணபலம், அதிகார பலம், ஆள் பலம் என  அனைத்தையும் மீறி தமிழக சட்ட மன்ற தேர்தலில் 15,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்து, உலக தமிழர்களின் பாராட்டை பெற்றார். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஈழ பிரச்சனையில் எப்போதும் கரிசனம் கொண்டிருந்து வருபவர். மனிதம் அமைப்பின் நெடுங்கால நண்பரான ஜவாஹிருல்லாஹ் அவர்களை, இன்று (21.05.2011) மாலை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து 2 மணி நேரம் தமிழக பிரச்சனை, ஈழ சிக்கல் தொடர்பான கலந்துரையாடிவிட்டு, சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பாராட்டப்பட்டது. மனிதம் அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். சென்னை மாவட்ட மனிதம் அமைப்பின பொறுப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு இனிப்பை வழங்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
(நடுவில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் - வலது அக்னி சுப்பிரமணியம், இடது சுரேஷ்)
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க) என்ற சமூதாய அமைப்பை தொடங்கிய காலத்திலிருந்து 1996 முதல் அதன் தலைவராக இருந்து வருகிறார். த.மு.மு.க-வின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி-யின் தலைவராகவும் இருந்து வருகிறார். ஏராளமான நூல்கள் மற்றும் கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர், 2007ல் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்திய சிறுபான்மை மக்கள் சார்பாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தார். வட்டியில்லா கடன் பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்று, அதனை நடைமுறைபடுத்தி, புரட்சி செய்து வருகிறார். இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், மலேசியா, மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல்வேறு மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றியுள்ளார்.
மனிதம் அமைப்பின் தலைவர் அக்னி சுப்பிரமணியத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது முக்கியமாக பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் சொன்ன கருத்துக்களை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவைகளாகும்:
  • அ.தி.மு.க.வுடன் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும் வெற்றி பெற்றபோதும், தங்களது கட்சியினர் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தோம். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்து வன்முறையை சிறுபான்மையினரின் மீது ஏவி விட்டு கொடுரப்படுத்திய நரேந்திர மோடி, அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால்தான், அந்நிகழ்ச்சியை புறக்கணித்தோம் என்று சொன்ன பேரா., தமிழ் இனத்தை அழித்த இராசபக்சேவோடு, தமிழ் நாட்டிலிருந்து சென்ற சிலர் கை குலுக்கி வந்தது மிகவும் வேதனையளித்து என்று சொன்னபோது, இன உணர்வை எவ்வாறு பேரா. மதிக்கின்றார் என்பதை நாம் புரிந்து கொண்டோம்.
  • போர் குற்றவாளியான இராச பக்சேவை, வரும் சட்ட மன்ற முதல் கூட்டத் தொடரில், பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவர மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தும் என் உறுதியளித்தார்.
  • அன்மையில் கப்பலில் பிடிபட்ட போர் குற்ற புத்தகங்களை, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அப்புத்தகங்களை மீட்டு தருவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளுவேன் என்றார்.
  • ஈழத்தமிழர்களின் குரலாக தம்முடைய கட்சி என்னெற்றும் இருக்கும் என்று வாக்குறிதியளித்தார்.
மனிதம் அமைப்புடனான நட்பு என்றென்றும் இருந்து வரும். மனித நேயப் பணிகளில் பங்கெடுக்கும் என்று மனிதம் அமைப்பின் செயல் இயக்குனரிடம் புன்முகத்துடன் கை குலுக்கி நன்றியோடு விடைபெற்றனர், மனிதம் அமைப்பினர்.
free counters