அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

20 பிப்., 2011

அதிமுக கூட்டணியில் ம.ம.க.,வுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு



சென்னை, பிப்.20- தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இத்தகவல் அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலர் பி.அப்துல் சமது, பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது மற்றும் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், மனிதநேய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்நிகழ்வின் போது, அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
free counters