ஆமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்று நடந்த 2-வது காலியுறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை , இந்தியா 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் ஆஸி.கேப்டன் பாண்டிங்கின் உலகக்கோப்பை ஹாட்ரி கனவிற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்தியா துணைக்கண்டத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. 23-ம் தேதி நடந்த முதல் காலிறுதி போட்டியில் பாகிஸ்தான், வெண்டீஸ் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு காலிறுதி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஆஸ்திரேலியா- இந்தியா மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸி. முதலில் பேட் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது.கேப்டன் ரிக்கிபாண்டிங் 104 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் ஆஸி.யின் ஹாட்ரிக் கனவினை இந்தியா தகர்த்தது. கடந்த 2003-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறதி ஆட்டத்தில் இந்தியாவை ஆஸ்திரேலியா 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. பி்ன்னர் 2007-ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் இலங்கையை ஆஸி. 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. இரு உலக்கோப்பை சாம்பியன் பட்டத்தினையும் ஆஸ்திரேலியாவின் கேப்டன் ரிக்கி பாண்டிங் வென்றார்.
தற்போது நடக்கும் 2011-ம் உலக்கோப்பை போட்டியில் காலிறுதியில் ஆஸ்திரலியா , இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ளது.. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை ஹாட்ரி கனவினை இந்தியா தகர்த்து 2003-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் நடந்த தோல்விக்கு பழி தீர்த்துள்ளது. குஜராத் மாநிலம் , ஆமதாபாத் , வல்லபாய்பட்டேல் மைதானத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியிருக்க , இந்திய அணி துடிப்பான பீல்டிங், பவுலிங்கில் அசத்தியது. ஜாஹீர்கான், யுவராஜ்சிங், ஆஸ்வின் ஆகியோர் தலா 2விக்கெட்டுகள் எடுக்க , ஆஸி. இந்தியாவுக்கு 261 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பேட்டிங்கில் களம் இறங்கிய இந்தியா துவக்கம் முதலே நிதானதத்துடன் விளையாடியது. ஏறத்தாழ 40, 50 ரன்கள் என்ற இடைவெளியில் தான் இந்திய அணியின் விக்கெட்டுகள் வீழந்தன. மாஸ்டர்பேட்ஸ்மேன் சச்சின் பொறுப்புடன் விளையாடி 53 ரன்கள் சேர்த்தார். இதைத்தொடர்ந்து காம்பீர்(50), யுவராஜ்சிங் (57) ஆகியோர் அரை சதம் அடித்து இந்தியாவை வெற்றி்ப்பாதைக்கு கொண்டு சென்றனர். வெற்றி இலக்கான 261 ரன்களை எட்ட இந்திய வீரர்கள் எவ்வித பதட்டமும் அடையவில்லை. மாறாக மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் தான் பதட்டமும், பரபரப்பும் அடைந்தனர். இறுதியில் 47.4 -வது ஓவரில் யுவராஜ்சிங் அடித்த பவுண்டரி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தது. இந்திய வீரர்களின் நிதனாமான ஆட்டத்தால் இந்தியா, ஆஸி.யை வென்று சூப்பராக அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் ( 1999, 2003, 2007) தொடர் சாம்பியன்ஷிப் கனவிற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. இந்த வெற்றியின் மூலம் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தானை , மொகலியில் வரும் 30-ம் தேதி எதிர்கொள்கிறது. உலக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய கண்டத்தின் மூன்று மாஜி சாம்பியன்களான பாகிஸ்தான் (1992) , இந்தியா (1983) , இலங்கை(1996) , ஆகிய நாடுகளை ஆஸ்திரேலிய அணி முறையே 1999-ம் ஆண்டு பாகிஸ்தானையும், 2003-ம் ஆண்டு இந்தியாவையும், 2007-ம் ஆண்டு இலங்கையையும் வென்று தொடர்ச்சியாக மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றது. இந்தாண்டு உலக்கோப்பை கிரிக்கெட் சாம்பின் கனவு தகர்ந்து காலிறுதியிலேயே பரிதாபமாக வெளியேறியது.
கடந்த மூன்று உலகக்கோப்பை இறுதிபோட்டிகள் விபரம்:
1999-ம் ஆண்டு: பாகிஸ்தான் 132/10, ஆஸ்திரேலியா 133/2 ( ஆஸ்திரேலியா சாம்பியன் ) (கேப்டன் ஸ்டீவ் வாக் )
2003-ம் ஆண்டு : ஆஸ்திரேலியா 359/2 , இந்தியா 234/10 (ஆஸ்திரேலியா சாம்பியன்) (ரிக்கி பாண்டிங்)
2007-ம் ஆண்டு : ஆஸ்திரேலியா 281/4, இலங்கை 215/8 (ஆஸ்திரேலியா சாம்பியன்) (ரிக்கி பாண்டிங் ) .

18,000 ரன்களை கடந்தார் சச்சின்
ஆமதாபாத், மார்ச் 24: இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 18 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் பிரட் லீ வீசிய 14-வது ஓவரில் ஒரு ரன் எடுத்து 45 ரன்களை எட்டியபோது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 18 ஆயிரம் ரன்களை எடுத்து சாதனை படைத்தார் சச்சின்.
இந்த ஆட்டம் சச்சினுக்கு 451-வது ஆட்டமாகும். 177 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சச்சின் 14,692 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி என மொத்தம் 32,700 ரன்கள் குவித்துள்ளார் சச்சின். டெஸ்ட் போட்டியில் 51 சதங்களையும், ஒருநாள் போட்டியில் 48 சதங்களையும் சச்சின் அடித்துள்ளார்.
6-வது உலகக் கோப்பையில் விளையாடும் சச்சின், உலகக் கோப்பைகளில் அதிகபட்ச ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையையும் தன்னகத்தே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.