அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

22 மார்., 2011

ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் போட்டி-மனைவி, மச்சான் சுதீஷ் போட்டியிடவில்லை


சென்னை: தேமுதிக தலைவர்  இந்த முறை விருத்தாச்சலத்தில் போட்டியிடவில்லை. மாறாக ரிஷிவந்தியம் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.


தேமுதிக போட்டியிடும் 41 தொகுதிகளும், அதில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களின் பெயர்களும் நேற்று வெளியிடப்பட்டன.

அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். விருத்தாச்சலத்தில் அவர் இந்த முறை போட்டியிடவில்லை.

அதேபோல விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விருகம்பாக்கத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால்தான் இந்தத் தொகுதியை அதிமுகவிடமிருந்து பிடிவாதமாக கேட்டு வாங்கினார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது விருகம்பாக்கத்தில் தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷும் தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்கும் விஜயகாந்த் சீட் தரவில்லை.

நடிகர் அருண் பாண்டியனை பேராவூரணி தொகுதியில் வேட்பாளராக நியமித்துள்ளார் விஜயகாந்த்.

கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலந்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக வேட்பாளர் முழுப் பட்டியல்

  1. ஆலந்தூர் - பண்ருட்டி ராமச்சந்திரன்
  2. ரிஷிவந்தியம் - விஜயகாந்த்
  3. பேராவூரணி - சி.அருண்பாண்டியன்
  4. ராதாபுரம் - மைக்கேல் எஸ்.ராயப்பன்
  5. விருதுநகர் - க.பாண்டியராஜன்
  6. விருகம்பாக்கம் - ப.பார்த்தசாரதி
  7. ஈரோடு (கிழக்கு) - வி.சி.சந்திரகுமார்
  8. பத்மநாபபுரம் - எஸ். ஆஸ்டின்
  9. விருத்தாசலம் - பிவிபி முத்துக்குமார்
  10. சூலூர் - கே.தினகரன்
  11. திருக்கோயிலூர் - எல்.வெங்கடேசன்
  12. திருச்செங்கோடு - சம்பத்குமார்,
  13. ஆரணி - ஆர்.மோகன்
  14. செங்கம் (தனி) - டி.சுரேஷ்குமார்
  15. பட்டுக்கோட்டை - என்.செந்தில்குமார்
  16. கும்மிடிபூண்டி - சி.எச் சேகர்,
  17. திருத்தணி - அருண் சுப்பிரமணியன்
  18. சோளிங்கர் - பி.ஆர்.மனோகர்
  19. தருமபுரி - பாஸ்கர்
  20. கெங்கவல்லி (தனி) - ஆர்.சுபா
  21. மதுரை மத்தி - சுந்தர்ராஜன்
  22. கூடலூர் (தனி) - எஸ்.செல்வராஜ்
  23. திருவாடானை - முஜிபுர் ரஹ்மான்
  24. திட்டக்குடி (தனி) - தமிழ் அழகன்
  25. குன்னம் - துரை.காமராஜ்
  26. மயிலாடுதுறை - ஏ.ஆர்.பாலஅருட்செல்வம்
  27. திருவெறும்பூர் - எஸ்.செந்தில்குமார்
  28. சேலம் (வடக்கு) - மோகன்ராஜ்
  29. ஒசூர் - டாக்டர் எஸ்.ஜான்சன்
  30. லால்குடி - அ.தி.செந்தூரேஸ்வரன்
  31. செங்கல்பட்டு - டி.முருகேசன்
  32. எழும்பூர் (தனி) - நல்லதம்பி
  33. செஞ்சி - சிவா (எ) சிவலிங்கம்
  34. கம்பம் - பி.முருகேசன்
  35. சேந்தமங்கலம் - சாந்தி ராஜமாணிக்கம்
  36. திருப்பரங்குன்றம் - ஏ.கே.டி.ராஜா
  37. ஆத்தூர் - எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியன்
  38. பண்ருட்டி - பி.சிவக்கொழுந்து
  39. அணைக்கட்டு - வி.பி.வேலு
  40. வேப்பனஹள்ளி - எஸ்.எம்.முருகேசன்
  41. மேட்டூர் - எஸ்.ஆர்.பார்த்திபன்
free counters