அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

26 மார்., 2011

தி.மு.க.,வின் இலவசங்களால் மக்கள் நிலை மாறவில்லை:ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி


சென்னை:""தி.மு.க., அரசு கொடுத்த இலவசங்களால் தமிழக மக்களின் நிலை மாறவில்லை,'' என, ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அதற்காக ம.ம.க., பாடுபடும். ம.ம.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்று, மக்களுக்காக உழைக்கும் எம்.எல்.ஏ.,க்களாக செயல்படுவர்.கடந்த காலங்களில், தி.மு.க., அரசு கொடுத்த இலவசங்களால் மக்களின் நிலை எந்த விதத்திலும் மாறவில்லை.
ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில் மக்களை சுரண்டி ஏமாற்றி விட்டனர். இனி அவர்கள் ஆட்சி வந்தால் மன்னராட்சியாக மாறிவிடும். இலங்கையிலும், இங்கும் இருக்கும் தமிழர்களை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை.அரசு கேபிள் "டிவி'யை, 100 கோடியில் துவக்கி, இன்று அதன் நிலை என்னவென்றே தெரியவில்லை. நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொடர் மின்வெட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெட்டி கொல்லப்பட்டார்.இந்த பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்வோம். ஜெயலலிதாவும், விஜயகாந்தும் எங்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்வர். எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்று தொகுதிகளிலேயே தங்கியிருந்து மக்களுக்கு பணியாற்றுவர்.இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.
free counters