அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

8 ஏப்., 2011

ஜப்பானில் மீண்டும் பாரிய நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது! (வீடியோ




ஜப்பானின் இன்று வியாழக்கிழமை இரவு மாபெரும் நிலநடுக்கம் ஒன்று மீண்டும் ஏற்பட்டுள்ளதுடன் ஆசிய பசுபிக் மையத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஜப்பானின் தேசிய தொலைக்காட்சியான NHK இது தொடர்பில் விடுத்த அறிவிப்பில், ஜப்பானின் செண்டாய் நகரிலிருந்து 60 மைல் தொலைவிலும், புகுஷிமா நகரிலிருந்து 90 மைல் தொலைவிலும் உள்ள கடற்பகுதி ஒன்றில் 25 மைல் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 74. மக்னிடியூட்டாக உணரப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தை அடுத்து, 215 தொலையில் உள்ள டோக்யோ நகரில் ஒரு நிமிட நேரத்திற்கு கட்டிடங்கள் அதிர்வது உணரப்பட்டுள்ளது.

இதையடுத்து ஜப்பான் புவியல் மையம் விடுத்துள்ள அறிவிப்பில் 3.2 மஅடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்துள்ளன எனவும் ஏற்கனவே பாதிப்படைந்த ஜப்பானின் வடகிழக்கு பகுதிகளில் மீண்டும் சுனாமி ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்நிலநடுக்கத்தால் புகுஷிமா டாய் இச்சி அணு மின் நிலையத்திற்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட போவதில்லை என டோக்கியோ மின் நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் 11ம் திகதி, ஜப்பானில் இடம்பெற்ற பூகம்பம் சுனாமி என்பவற்றால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், அணு மின் நிலையங்கள் சேதமடைந்ததால் கதிரியக்க தாக்கம் பரவத்தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
free counters