அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

11 ஏப்., 2011

பிரகாசத்தில் மெழுகுவர்த்திகள்

இராமநாதபுரம்:


'ராஜபக்ஷேவின் நண்பேன்டா’ புகழ் கே.அசன் அலி, காங்கிரஸ் வேட்பாளர். இவர் எம்.எல்.ஏ-வாக இருந்த ஐந்து ஆண்டுகளில் இப்பகுதி மீனவர்கள் சிங்களக் கடற்படையிடம் உதைபட்டதுதான் மிச்சம். மீனவர்கள் வாக்குகள் இவருக்கு இல்லை. எனவே, இவரை எதிர்ப்பவரான அ.தி.மு.க. கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெம்பாக உள்ளார். இஸ்லாமியர் வாக்குகளும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்க... அ.தி.மு.க-வின் ஆதரவும் அமோகம். காங்கிரஸ் எதிர்ப்பும் ம.தி.மு.க.வினரின் மறைமுக ஆதரவும் ஜவாஹிருல்லாவை ஜெயிக்கவைக்கும்!

சேப்பாக்கம் - திருவேல்லிக்கேணி:
கருணாநிதி 'கா’ விட்ட தொகுதி. தி.மு.க-வின் ஜெ.அன்பழகனும், மனிதநேய மக்கள் கட்சியின் எம். தமிமுன் அன்சாரியும் மோதுகிறார்கள். உதயசூரியனுக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஓட்டு போடும் அரசு ஊழியர்கள் இங்கு நிறைந்திருப்பது தி.மு.க-வுக்குப் பலம். முதல்வரின் தொகுதியாக இருந்தாலும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சரிக்குச் சமமாக இஸ்லாமியர்களின் வாக்குகளை லபக்கிக்கொள்வார் தமிமுன் அன்சாரி. அடிப்படை வசதி இன்றி அல்லாடும் நடுநிலை வாக்காளர்கள் தி.மு.க. மீது வெறுப்புடன் இருப்பதால், தமிமுன் அன்சாரி பார்டரில் பாஸ் ஆகிறார்!

ஆம்பூர்:

காங்கிரஸ் சார்பாக ஜெ.விஜய இளஞ்செழியனும், மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எ.அஸ்லம் பாட்ஷாவும் களத்தில் போட்டி போடுகிறார்கள். காங்கிரஸ் போட்டி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. பாலூர் சம்பத் கணிசமான வாக்குகளைப் பிரிக்கிறார். இதனால், விஜய இளஞ்செழியனுக்கும் பாலூர் சம்பத்துக்கும் கடுமையான போட்டி...  இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பதில்.  அ.தி.மு.க. கூட்டணி சார்பாகக் களத்தில் நிற்கும் அஸ்லம் பாட்ஷாவுக்கு அடிக்கிறது அதிர்ஷ்டக் காற்று!
free counters