அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

23 ஏப்., 2011

வட்டியை இஸ்லாம் தடுத்துள்ளதால் இதனுடன் தொடர்பற்றே முஸ்லிம்கள் வாழ வேண்டும்'

மருதமுனை நிருபர் : வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் இஸ்லாம் முற்றாகத் தடுத்துள்ளது. எனவே,முஸ்லிம் சமூகம் வட்டியுடன் தொடர்பற்றதாக வாழ வேண்டுமென மருதமுனை அல் மஸ்ரபுல் இஸ்லாமியு நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.ஹுசைனுதீன் றியாலி
தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் வட்டியற்ற எதிர்கால சமூகமொன்றை உருவாக்கும் நோக்கோடு அல்மஸ்ரபுல் இஸ்லாமியு நிறுவனத்தின் ஆரம்பக் கூட்டம் அண்மையில் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மருதமுனை தாரல் ஹுதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரியின் அதிபர் எம்.எல்.முபாரக் மதனி, தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் கே.எம்.எம்.பழ்லுவ்ஹக்,சம்மாந்துறை அல்.மஸ்ரபுல் இஸ்லாமியுவின் முகாமையாளர் எஸ்.எல்.இப்றாஹீம் மற்றும் மருதமுனைப் பிரதேச தனவந்தர்கள், கல்வியியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

எமது பிரதேசத்திலே பலர் வட்டியுடன் தொடர்புபட்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறு தொடர்புடையவர்கள் இதிலிருந்து விடுபட வேண்டும். எதிர்காலத்திலே வட்டியில்லாத இளைய தலைமுறை சமூகத்தை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும். எமது மருதமுனை ஸக்காத் நிதியத்தின் வழிகாட்டலில் இந்த அல் மஸ்ரபுல் இஸ்லாமியுவின் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்காலத்திலே வசதிகுறைந்தவர்களுக்கும் அவசர தேவையுள்ளவர்களுக்கும் உதவுவதற்கு எமது நிறுவனம் முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. எனவே, எமது புனிதமான பணி தொடர்வதற்கு எல்லோரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

free counters