அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

18 ஜூலை, 2011

திருப்பூர் சாயத் தொழில் பிரச்னையில் ஜெயலலிதா தலையிட்டு தீர்வு காண கோரி மனித சங்கிலி போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் சாயத் தொழில் பிரச்னையில், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு தீர்வு காண கோரி ஜூலை 22 ம் தேதி, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

திருப்பூர் சாய தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து, அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம், மார்க்சிய கம்யூஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் காமராஜ் தலைமை வகித்தார். திருப்பூரில், சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சமூகப் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

அப்போது , சாய கழிவுநீர் பிரச்னையில், தமிழக முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பொருளாதார பாதிப்புகளில் இருந்து திருப்பூரை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மேலும், சாய ஆலைகளை திறந்து இயக்க, தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூலை 22 ம் தேதி திருப்பூர் குமரன் சிலை அருகே மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

"ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழிற்நுட்பத்தை நடத்த முன்வரும் சாய ஆலைகளை இயங்க அனுமதிக்க வேண்டும் , விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் , கண்காணிப்பு குழுவை விரிவாக்கம் செய்ய வேண்டும் , ஏற்கனவே அறிவித்தபடி,ரூ 320 கோடி ரூபாய் மானிய உதவியை வழங்க வேண்டும், சாய ஆலைகளுடன் சலவை ஆலைகளை சேர்க்காமல், சலவை ஆலைகளை உடனடியாக இயங்க அனுமதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில், சட்ட மன்ற உறுப்பினர் தங்கவேல், இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ரவி, தே.மு.தி.க., ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி போன்ற பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
free counters