அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

20 அக்., 2011

சொத்து குவிப்பு வழக்கு: ஜெ. நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்

பெங்களூரு/சென்னை , வியாழன், 20 அக்டோபர் 2011
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாளை மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகிறார். 

நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா,பெங்களூர் பரப்பன அக்ரஹார தனி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயலலிதவிடம் கேட்பதற்காக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா சுமார் 300 கேள்விகள் அடங்கிய பட்டியலை தயார் செய்து வைத்திருந்தார்.

காலை 11 மணி அளவில் விசாரணை தொடங்கியதும் அவரிடம் கேள்விகளை கேட்க தொடங்கிய ஆச்சார்யா,மதியம் 2 மணி வரை கேள்விகளை கேட்டார்.

இந்நிலையில் மதிய உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டவுடன், ஜெயலலிதா தனது காரில் அமர்ந்தபடியே மதிய உணவை சாப்பிட்டார். அவருக்காக பெங்களூரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றிலிருந்து உணவு வரவழைக்கப்பட்டது. 

இந்நிலையில்,மதிய உணவு இடைவேளை முடிந்து விசாரணை தொடங்கியதும் அவரிடம் ஜெயலலிதா மீண்டும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தொடங்கினார். 

மாலை 5.15 மணி வரை கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் எவ்விதத் தயக்கமோ,சோர்வோ இல்லாமல் அவர் பதிலளித்ததாக ஜெயலலிதா தரப்பு மூத்த வழக்கறிஞர் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, அவரிடம் நாளையும் இதேபோன்று கேள்விகள் கேட்கப்படவுள்ளது. நாளை காலை 11 மணிக்கு மேல் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி கூறியிருந்தார். எனவே, நாளை காலை மீண்டும் ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று வழக்கறிஞர்கள் கூறினர். 

அதற்கு அவர் அளிக்கும் பதில்கள் முடிந்தபிறகு, ஜெயலலிதா தரப்பு அளிக்கவுள்ள கேள்விகள் விசாரணை நிறைவுபெறும். அதன்பின்னர், சசிகலா, இளவரசி உள்ளிட்டோரிடம் தொடங்கும் என்று தெரிகிறது. 

நீதிமன்றத்தில் இன்று நடந்த இந்த விசாரணையை அடுத்து அவர் நீதிமன்றத்தில் இருந்து மாலை 5.17 மணிக்கு வெளியேறினார்.பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டார்.
free counters