அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

29 ஜன., 2011


கோவையில் 92 வது ஆம்புலனஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி

கோவை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் 92-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நடந்தது.
கோவையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் காலம் சென்ற மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அன்னாரின் பெயரில் கோவையில் மருத்துவ மனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இந்த பகுதியில் அனைத்து சமுகத்தை சேர்ந்த மக்களும் பயனடைய இந்த மருத்துவ மனை துவக்கப்பட்டது. தினமும் சுமார் 40க்கும் மேற்பட்றோர்கள் வந்து சிகிச்சைகள் அழிக்கப்படுகிறது. ஒரு நபர்க்கு டாக்டர் கட்டணம் 20 ரூபாய் மற்றும் மருந்துக்கு 10 ரூபாய் வாங்கப்படுகிறது, இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு மிகவும் பயன் அடைகிறார்கள்.

இப்போது இந்த பகுதியில்அனைத்து சமூக மக்கள் பயன் அடையா ஒரு ஆம்புலன்ஸ் தேவைபட்டது. இதன் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி 26ம் தேதி அப்துர் ரஹீம் மருத்துவமனை முன்பு, இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 92வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தமுமுக நகர தலைவர் ஷாஜஹான் தலைமையில், தமுமுக மருத்து அணி நகரசெயலாளர் நசீர் பாபு , வரவேற்புரை நிகழ்த்தினார். ஆம்புலன்ஸை மாநில செயளாளர் கோவை இ. உமர் அர்ப்பணித்தார். தமுமுக மாநில கழக பேச்சாளர் கோவை ஜாகீர், தமுமுக மாவட்ட தலைவர் பர்க்கத் அலி,  மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் ,தமுமுக மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, மற்றும் மாவட்டம், நகரம், கிளை கழக,தமுமுக, மமக, நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள்.

இதில் 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். முடிவில் குனிசை நகர மருத்துவ அணி செயளாளர் அகமது கபீர் நன்றிகூறினர்.

இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ மனை பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் செய்து வந்தார்.

free counters