அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

15 ஜன., 2011

டெல்லியில் பள்ளிவாசல் இடிப்பு! த.மு.மு.க. கடும் கண்டனம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
டெல்லி நிஜாமுதீனில் ஜங்புரா பகுதியில் கடந்த புதன்கிழமை (12.01.2011) மஸ்ஜித் அல் நூர் பள்ளிவாசல் ஒன்று பட்டப்பகலில் இடிக்கப்பட்டதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இடிக்கப்பட்ட பள்ளிவாசல், வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானது மட்டுமின்றி அதுகுறித்து அரசு அறிவிக்கையில் (கெஜட்டில்) வெளியிடப்பட்டிருக்கிறது.
தகுந்த காரணங்கள் இன்றி ஒரு பிழையான நீதிமன்ற உத்தரவைக் காரணமாக வைத்து காங்கிரஸ் தலைமையிலான டெல்லி நிர்வாகம் இக்கொடூரக் குற்றத்தை பட்டப்பகலில் நடத்தியுள்ளது. இடிக்கப்பட்ட பள்ளிவாசலில் முஸ்லிம்கள் நீண்டகாலமாக தொழுகை நடத்தி வந்துள்ளனர்.
சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் 1992ல் பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தடுக்க முடியாத காங்கிரஸ் அரசு தற்போது தலைநகர் டெல்லியிலேயே பள்ளிவாசலை இடிக்க வழிவகுத்துள்ளது.
பள்ளிவாசல் அமைந்திருந்த இடத்தில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக தொழுகை நடத்துவதற்கு டெல்லி நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும், பள்ளிவாசலை மீண்டும் கட்டுவதற்கு அனுமதி அளிப்பதோடு உரிய இழப்பீட்டை டெல்லி மாநில அரசு அளிக்க வேண்டும், மேலும் பள்ளிவாசலை இடிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகிறது.
இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் குதிக்கும் என்று எச்சரிக்கிறது.

இடிக்கப்பட்ட பள்ளிவாசல் இடம் வக்பு வாரியத்திற்குச் சொந்தமானது என்பது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான ஆவணங்கள்


free counters