புது டெல்லி :பள்ளிவாசல் இடிக்கப்பட்டது தொடர்பாக சமாதான செய்யும் விதமாக டெல்லி முதல்வர் ஷீலா தீக்சித் ஷாஹி இமாம் செய்யத் புகாரியை நேரில் சந்தித்தார். ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்க் யாதவ் ராஷ்ட்ரிய ஜனதா தள சாந்தினி சவுக் சட்டமன்ற உறுப்பினர் ஷோயப் இக்பால் உட்பட சமுதாய மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தலைமையில் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட இடத்தில் உள்ளூர்வாசிகள் தொழுகை தொழுகை நடத்தினர்.
காங்கிரஸ் அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை சமாஜ்வாடி கட்சித்தலைவர் கடுமையாக சாடினார்.
இந்த பள்ளிவாசல் இடிப்பை தொடர்ந்து கலவர சூழல் உருவாக்கப்பட்டுள்ளது