அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

7 ஜன., 2011

உணவு தருவதில் தாமதம் - அப்துல் கலாமுக்கு அவமதிப்பு?!




மதுரை: இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு காலை உணவு வழங்குவதில் தாமதம் செய்ததால், அவருடைய பயண நிகழ்ச்சி ஒரு மணிநேரம் பாதிக்கப்பட்டது.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமுக்கு, காலை 7 மணிக்கு உணவு தரப்பட வேண்டும் என்று உதவியாளர்கள் நேற்றிரவே சொல்லியிருந்தனர்.

அதன்படி, இன்று காலை 7 மணிக்கு உணவுண்ணச் சென்றார் அப்துல்கலாம். ஆனால் உணவு தரப்படவில்லை. சிறிதுநேர இடைவெளியில் மூன்று முறை சென்று அமர்ந்திருக்கிறார். ஆனாலும் உணவு பரிமாறப்படவில்லை. சுமார் ஒரு மணி நேர தாமதத்தில் 7.50க்கு மேல்தான் காலை உணவு தரபட்டுள்ளது.அதனால் அவருடைய அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு மணி நேரம் தாமதம் ஆகியுள்ளது. ஒரு மணிநேர தாமதத்துக்குப் பிறகு அவர் ராமேஸ்வரம் புறப்பட்டார்.

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த சம்பவம் என்பதால், இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.
free counters