அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

11 பிப்., 2011

15 வயது சிறுவன் நடத்திய மனிதவெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் சாவு


பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகே ராணுவப் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை சிறுவன் நடத்திய தற்கொலைத் தாக்குதலையடுத்து, அந்தப் பகுதியில் கண்காணிப்புப்
பெஷாவர்,பிப்.10: பாகிஸ்தானின் வடமேற்குப் பிராந்தியத்தில் பள்ளிச் சீருடையில் வந்த 15 வயது சிறுவன் ராணுவப் பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 31 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.
 தாக்குதல் நடந்த ராணுவப் பயிற்சி மையம், பாகிஸ்தானின் மிக முக்கியமானதும் பிரபலமானதுமான ராணுவ அமைப்பாகும். வடமேற்குப் பிராந்தியத்தின் மர்தான் பகுதியில் இது அமைந்திருக்கிறது.
 "இது தற்கொலைத் தாக்குதல்தான். பள்ளிச் சீருடையில் நடந்து வந்த சிறுவன்,ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்த பகுதியில் தான் கொண்டுவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்' என்று மூத்த போலீஸ் அதிகாரி அப்துல்லா கான் தெரிவித்தார். ராணுவ செய்தித் தொடர்பாளரும் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அதனால் இறந்தவர் எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 தாக்குதல் நடத்திய சிறுவன் அணிந்திருந்த சீருடை, அருகிலுள்ள பள்ளிச் சிறார்கள் அணிவது என்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இதனால் அணிவகுப்பு நடந்த இடத்துக்கு சர்வசாதாரணமாக வந்து, தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
 தாக்குதல் நடந்த பகுதியில் ராணுவம் மீட்புப் பணிகளைச் செய்து வருகிறது. ஊடகங்களுக்கும், பொது அமைப்புகளுக்கும் தாக்குதல் நடந்த பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
 சிறுவனின் உடலைப் பரிசோதித்ததில் அவனுக்கு 15 வயது இருக்கலாம் எனத் தெரியவந்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
 அண்மையில் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய மொஹ்மாண்ட் பழங்குடி மாவட்டத்திலிருந்து ராணுவ மையம் சுமார்  50 கி.மீ. தொலைவில் உள்ளது. ராணுவ நடவடிக்கையால், கடந்த ஒரு வாரத்தில் இந்தப் பழங்குடிப் பகுதியில் இருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
கிலானி கண்டனம் :
ராணுவப் பயிற்சி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸô கிலானி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற பயந்தாங்கொள்ளித்தனமான தாக்குதல்களால், பாதுகாப்புப் படைகள் மீதான நம்பிக்கையும், பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்கிற அரசின் உறுதியும் எந்தவிதத்திலும் குறையாது என்று அவர் கூறினார்.
தலிபான் பொறுப்பேற்பு:
ராணுவப் பயிற்சி மையம் மீதான தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு தலிபான் பயங்கராவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்திருக்கிறது.  தலிபான் செய்தித் தொடர்பாளர் அசாம் தாரிக் சில பத்திரிகை அலுவலகங்களுடன் தொலைபேசியில் பேசும்போது இதைத் தெரிவித்தார்.
 "இந்தத் தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம் என்று பெருமையுடன் ஒப்புக்கொள்கிறோம். பழங்குடிப் பகுதிகள் மீது ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கான பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. ராணுவ நடவடிக்கைகள் கைவிடப்படும் வரை தற்கொலைத் தாக்குதல்கள் தொடரும்' என்று அவர் கூறினார்.
 கடந்த 2006-ம் ஆண்டிலும் இதே பயிற்சிப்பள்ளி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
free counters