நிருபர்களை சந்திக்க மறுத்த டோனி
இந்திய அணி கேப்டன் டோனி கொல்கத்தாவில் நேற்று நடந்த விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றார். 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த விளம்பர நிகழ்ச்சியில் யூசுப்பதான், காம்பீர், யுவராஜ்சிங், ஷேவாக், ஹர்பஜன், சாவ்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு டோனியை சந்திக்க ஏராளமான நிருபர்கள் குவிந்து இருந்தனர். மைதான பணி முடியாததால் கார்டன் இந்தியா- இங்கிலாந்து இடையேயான ஆட்டத்தை கொல்கத்தாவில் இருந்து ஐ.சி.சி. மாற்றியது.
இது தொடர்பாக முக்கிய கேள்விகளை கேட்பதற்காக நிருபர்கள் தயாராக இருந்தனர். ஆனால் டோனி நிருபர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். இதனால் நிருபர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். நீண்ட நேரம் வெளியில் காத்து நின்றதால் நிகழ்ச்சி அமைப்பாளர்களும், நிருபர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது