அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

12 பிப்., 2011

குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க நடவடிக்கை-தேர்தல் ஆணையர்

CEC Qureshi


சென்னை: குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் 
என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறினார்.

சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,

வரும் சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்கள் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி ரசீது வழங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதே போல், வேட்பாளர்கள், தேர்தல் வரவு, செலவு பரிவர்த்தனைக்காக வங்கிகளில், புதிதாக தனி கணக்கு துவங்க வேண்டும் என்ற திட்டமும் இத் தேர்தலில் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். அந்த வங்கிக் கணக்கு மூலம்தான் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகளைச் செய்ய வேண்டும்.

அனைத்து இடங்களிலும் துணை ராணுவ படையினரை மட்டுமே பாதுகாப்பிற்கு பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேர்தல் நேரத்தில் பரிசீலிக்கப்படும் என்றார்.

எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற கேள்விக்கு, அதற்கு இப்போது பதில் சொல்ல முடியாது. தேர்தல் தேதியை முடிவு செய்த பின் 2 மணி நேரத்தில் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.

ரேஷன் கார்டை பயன்படுத்த முடியாது:

இந் நிலையில் இன்று தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், தமிழகத்தில் 99 சதவீதம் வரை புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன. வாக்களிக்கும்போது தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஒன்றை வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். ரேஷன் கார்டை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் அளித்ததற்கான அடையாளச் சீட்டுகள் வழங்குவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராகி வருகிறது. ஆனால் இந்த தேர்தலில் அவற்றை பயன்படுத்த முடியுமா என்பதை கூற முடியாது. குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் நிற்க தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் குரேஷியுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, தமிழக சட்டசபை தேர்தல் பணிகள், பள்ளித் தேர்வுகள் நடக்கும் தேதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சட்டசபைத் தேர்தல் மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும்.

தமிழ்நாட்டில் 4 கோடியே 50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. விடுபட்டவர்கள் தேர்தல் நடைபெறும் தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பு வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. பள்ளிகள், சமூகக்கூடங்கள், பொது நிறுவன அலுவலகங்கள் உள்பட 29,000 இடங்களில் இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவை வீடியோவில் பதிவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது

இப்போகு வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களைப் பரிசோதிக்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடந்து வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சோதனைப் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டில் ஓட்டுப்பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதை தலைமை தேர்தல் அதிகாரி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
free counters