அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

15 பிப்., 2011

எகிப்திய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளை கண்டித்து சேலத்தில் ஆர்பாட்டம்




சேலம் : கடந்து முப்பது ஆண்டுகாலமாக எகிப்து மக்களை ஆண்டுகொண்டிருந்த சர்வாதிகார ஆட்சியை ஒழித்துக்கட்டி அமைதிப் புரட்சி மூலம் நல்ல அரசியல் மாற்றம் ஏற்படுத்திய எகிப்து மக்களை வாழ்த்தியும் யூத அமெரிக்க கைக்கூலிகளை கண்டித்தும் மாபெரும் ஆர்பாட்டம் சேலத்தில் பாப்புலர் பிரண்ட் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 
சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சோசியல் டெமோக்ரடிக் கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் பரீத் அஹ்மத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் பைரோஸ் வரவேற்புரை நிகழ்த்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் முஹமத் பயாஸ் சிறப்புரை நிகழ்த்தினார்
அவர் தனது உரையில் உலக நாடுகளில் குறிப்பாக முஸ்லிம் அரபு நாடுகளில் யூத அமெரிக்க மேலாதிக்க முதலாளித்துவ சக்திகள் தலையிட்டு உண்மையான ஜனநாயக அரசு அமைவதற்கு முட்டுக்கட்டையாக இருந்துவருவதை கடுமையாக சாடினார்.
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எகிப்திய மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததுடன் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரத்திலும் அரசியலிலும் யூத அமெரிக்க தலையீட்டை வன்மையாக கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
free counters