அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

15 பிப்., 2011

முகவையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

Free Eye Camp at Ramnad
இராமநாதபுரம் பெரியபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் சென்ற 12/02/2011 அன்று பெரியபட்டினம் அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் நடத்தியது.

முகாமை பெரியபட்டினம் ஊராட்சித் தலைவர் அப்துல் ரஹீம் துவங்கி வைத்தார். மதியம் 2 மணி வரை நடந்த முகாமில் 168 நபர்கள் கலந்துகொண்டனர். அதில் 30 நபர்கள் இலவச அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கலந்து கொண்ட மக்கள் அனைவரும் பயன்பெற்று பாராட்டிச் சென்றனர்.




free counters