அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

23 பிப்., 2011

விஜய்யின் அரசியல் பொதுக் கூட்டம்: அதிரடி விரை‌வி‌ல் கொடி அ‌றிமுக‌ம்



இன்று விஜய்யின் முதல் அரசியல் பொதுக் கூட்டம் அரங்கேறுகிறது. மீனவர்கள் பெயரால் நடத்தப்படும் இந்தக் கூட்டத்துக்கு விஜய்யின் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.
சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை கொலை செய்வதும், தாக்குவதும், உபகரணங்களை களவாடிச் செல்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. புறநானூற்றுப் படையே புறப்பட்டு வா என சினிமாவில் வீர வசனம் எழுதும் தலைவர்கள் டெல்லிக்கு தந்தி அனுப்புவதோடு தங்களுடைய புறநானூற்று வீரத்தை பெட்டிக்குள் பூட்டிவிட்டார்கள். மீதமிருக்கும் உதி‌ரிகள் அவ்வப்போது சவுண்ட் விடுவதோடு ச‌ரி.விஜய் போன்ற ஆளும் கட்சியால் கட்டம் கட்டப்பட்டவர்களுக்கும் மீனவன்தான் பாதுகாப்பு கேடயம்.
இன்று விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் விடிபி கல்லூரிமைதானத்தில் பொதுக் கூட்டம் நடக்கிறது. மீனவன் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்பதுதான் இந்த பொதுக் கூட்டத்தின் நோக்கம். விஜய்யும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுவார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால் அரசியல் கட்சிகளும் இந்த பொதுக் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்
.அதிரடி விஜய்

விஜய் படங்களின் தொடர் தோல்விகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் படத்தின் கந்தலான கதை பாதி காரணம் என்றால் மீதி காரணம் அரசியல். தான், தனது, தனது குடும்பம் என்று மட்டும் நினைக்கும் சில சர்வாதிகார மனங்களே தனது எதி‌ரிகள் என்று பு‌ரிந்து கொண்ட விஜய், பாதுகாப்புக்கு அதிமுக பக்கம் சாய்ந்துள்ளார்.

இந்நிலையில் தனது குடும்ப வீட்டை அவர் விற்றுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

சாலிகிராமத்தில் உள்ளது விஜய்யின் குடும்ப வீடு. சில வருடங்களுக்கு முன்புதான் இந்த வீட்டிலிருந்து கடற்கரைப் பக்கம் தனது ாகையை மாற்றினார் விஜய். அப்போதிலிருந்து ஆளில்லாமல் கிடந்த இந்த வீட்டில் சமீபத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. விஜய் ஆண்டனியின் இசைக்கூடமாக மாறியது விஜய் வீடு.

வாடகைக்குதான் விஜய் ஆண்டனி அங்கிருக்கிறார் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் விஜய் வீட்டை விற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விற்பனை விஜய்யின் அரசியல் பிரவேசத்தை மேலும் பிரகாசப்படுத்தும் என ஜோதிடர்கள் கூறியதுதான் இதற்கு காரணம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
விரை‌வி‌ல் கொடி அ‌றிமுக‌ம் : நடிகர் விஜய்!

''தற்போது அரசியலில் குதிக்க தயாராக இல்லை. விரைவில் ரசிகர் மன்றத்துக்கான கொடியை மட்டும் அறிமுகம் படுத்தப்படும்'' என ஈரோட்டில் நடிகர் விஜய் நற்பணி மன்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

ஈரோட்டில் மாவட்ட தலைமை இளையதளபதி விஜய் தலைமை இளைஞர் அணி நற்பணி மன்றம், தலைமை இளைஞர் அணி நற்பணி மன்றம் சார்பில் ஈரோட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

விழாவில் நடிகர் விஜய் பேசுகை‌யி‌ல், ஈரோடு மாவட்ட ரசிகர்களிடம் இருந்து எனக்கு அதிக கடிதம் வருகின்றன. தமிழகத்தில் எனக்கு ஈரோட்டில் தான் முதலில் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டது. ஆகவே ஈரோடு எனக்கு முக்கிய நகரமாக உள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் நடிக்கும் படத்தில் சிகரெட் குடிக்க கூடாது என கூறினர். நல்ல விஷயங்களை யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்வேன். 

ஆ‌‌க் ஷன், காமெடி, காதல் அனைத்தும் ஒன்று சேர்ந்த படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது குடும்பத்தில் மனைவி, மகன் இருவரின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களது ஃபோட்டோவை இதுவரை வெளியிடவில்லை. அவனுக்கு நான் நடித்த படங்கள் ரொம்ப பிடிக்கும். அரசிய‌ல் என்ற கடலில் நீந்த தெரிந்தாலும் இப்ப நான் அதில் குதிக்க தயாராக இல்லை. எனது ரசிகர் மன்றத்துக்காக மட்டும் விரைவில் கொடியை அறிமுகம் செய்ய உள்ளேன் எ‌ன்று நடிக‌ர் ‌விஜ‌ய் கூ‌றினா‌ர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர், பொதுமக்களுக்கிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் காவ‌ல்துறை‌யின‌ர் தடியடியில் ஈடுபட்டதால் சற்று நேரம் சல சலப்பு ஏற்பட்டது. இதனால் நடிகர் விஜய் நிகழ்ச்சியை விரைவில் முடித்துக்கொண்டு செ‌ன்றா‌ர்.
free counters