நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தின் முதல் அடியாக இது பார்க்கப்படுவதாலும், அதிமுக ஆதரவு கொடுத்திருப்பதாலும், தேர்தல் சமயம் என்பதாலும் இந்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் ரசிகர்களோடு அதிமுகவினரும் பெரும் திரளாக கலந்து கொள்ளவுள்ளதால் கூட்டம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல லட்சம் பேரை இக்கூட்டத்திற்கும், போராட்டத்திற்கும் திரட்ட விஜய் தரப்பு தீவிரமாக உள்ளது. இதன் பொருட்டே அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். இதையடுத்தே விஜய் போராட்டத்திற்கு அதிமுக தனது ஆதரவை அளித்தது.
இன்று மாலை 4 மணிக்கு இந்தப் போராட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தின்போது பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையையும், நிவாரண உதவிகளையும், நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார் விஜய்.