அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

24 பிப்., 2011

அதிமுக - தேமுதிக கூட்டணி!


தமிழகத்தில் ஏறக் குறைய கூட்டணிக் கட்சிகளின் நிலைப் பாடு உறுதி செய்யப் பட்டு தொகுதிப் பங்கீடு வரைப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விஜயகாந்தின் தேமுதிக தன் நிலை குறித்து இன்னும் அறிவிக்காமல் உள்ளது. அதிமுக - தேமுதிக கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டு விட்டது என்ற செய்தி பல ஊடகங்களில் வெளிவந்தாலும் அதிமுக மற்றும் தேமுதிக கட்சிகளிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப் பூர்வ அறிவிப்பும் வெளியாக வில்லை.
சி.பி.ஐ யின் திமுகவிற்கு எதிரான நடவடிக்கைகள் சற்று தீவிரமடைந்த போதிலும் சி.பி.ஐ ன் இந்த நடவடிக்கை ஒரு கண்துடைப்பே என்றும் தேர்தல்  சீட் பேரத்திற்கு காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் நாடகம் என்றும் அரசியல் நோக்கர்கள்  கருதி வருகின்றனர். இருப்பினும் கடைசி கட்ட பேரம் படியாத நிலையில் சி.பி.ஐ திமுகவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கடைசிக் கட்ட அணி மாறுதலுக்குக் கூட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு சாரார் கருதி வருகின்றனர்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகும் பட்சத்தில் திமுக, காங்கிரஸ், பாமக,விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் முஸ்லீம் லீக் என திமுக தலைமயிலான அணியே சற்று வலிமை வாய்ந்த அணியாகக் கருதப் படுகிறது. தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைத்தால் மட்டுமே திமுக கூட்டணிக்கு ஒரு சரியான போட்டியை உருவாக்க முடியும் என்றும் இல்லையே திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகளை தேமுதிக பிரித்தால் அது திமுகவுக்குஎ சாதகமாக அமையும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதையே திமுக தலைமையிலான கூட்டணி விரும்புவதாகவும் தெரிகிறது.

திமுகவுக்கு சாதகமான இந்நிலை அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய இரு கட்சிகளுக்குமே இழப்பு என்பதால் இரு கட்சிகளுமே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவே விரும்பும். தேமுதிகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் திமுகவை வெல்ல எம்.ஜி.ஆர் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டுள்ளார். பேரம் படியுமா கூட்டணி அமையுமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

free counters