அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

11 மார்., 2011

எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்

சென்னை, மார்ச்.9: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ.அகமது தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக அகமது குறிப்பிட்டார்.

தற்போது திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவரம்:

திமுக-------------------------- 121

காங்கிரஸ்------------------------ 63

பாமக---------------------------- 30

விடுதலைச் சிறுத்தைகள்---------- 10

கொங்கு நாடு முன்னேற்ற கழகம்---- 7

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்------ 2

மூவேந்தர் முன்னேற்ற கழகம்------- 1
free counters