அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

11 மார்., 2011

நெல்லையில் 5 தொகுதிகளுக்குமுஸ்லிம் லீக் போட்டி வேட்பாளர்கள்?

திருநெல்வேலி:"இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், போட்டி வேட்பாளர்களை அறிவித்தது உண்மையில்லை' என, பொதுச் செயலர் அபுபக்கர் தெரிவித்தார்.தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு, மூன்று தொகுதிகள் வழங்கப்பட்டன. காங்கிரசுக்கு தருவதற்காக ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கட்சியின் நெல்லை மாவட்ட துணைச்செயலர் ஒருவர், நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கு, கட்சி சார்பில் வேட்பாளர்களாக சிலரை அறிவித்துள்ளார்.ஒரு தொகுதியை பறித்துக்கொண்ட தி.மு.க.,விற்கு, ஐந்து தொகுதிகளில் ஓட்டை பிரித்து பாடம் கற்பிப்போம் எனவும், தங்களுக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து கட்சியின் பொதுச் செயலர் அபுபக்கர் கூறுகையில், "நெல்லை உட்பட, அனைத்து மாவட்ட தலைவர்களும் சென்னையில் உள்ளனர். அது கட்சியின் அறிவிப்பு அல்ல. அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்' என்றார்
free counters