சென்னை : அதிமுக தேமுதிக
இடையே நிலவி வந்த தொகுதிப் பிரிப்பு குழப்பம் தீர்ந்து விட்டதாம். இரு கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பிரிப்பு சுகமூகமாக நடந்துள்ளதாக தேமுதிக கூறியுள்ளது. இதையடுத்து இன்று மாலை தேமுதிக வேட்பாளர் பட்டியலைவிஜயகாந்த்
அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கான தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக கடந்த 3 நாட்களாக விடாமல் பேசி வந்தனர். விடிய விடிய பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்தன. பண்ருட்டி ராமச்சந்திரனும், விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷும் கிட்டத்தட்ட போயஸ்தோட்டத்திலேயே முகாமிட்டுப் பேசி வந்தனர்.
நேற்றும் விடிய விடிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று அதிகாலையில்தான் பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வந்தது. பின்னர் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியே வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக -தேமுதிக தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. விஜயகாந்த் ஒப்புதல் பெற்றபின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதைத் தொடர்ந்து விஜயகாந்த் இன்று மாலை தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அறிவிப்பார் என்று தெரிகிறது.