சிதம்பரம், மார்ச் 25: சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பரங்கிப்பேட்டை பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரும், மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவருமான ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் வாக்கு சேகரித்தார்.
÷பரங்கிப்பேட்டை பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இப்பகுதியில் வேட்பாளர் ஸ்ரீதர்வாண்டையார் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்.
÷அங்கு மீரா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை முடித்து வந்த முஸ்லிம் சமுதாயத்தினரிடம் ஸ்ரீதர்வாண்டையார் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கோரினார்.
÷அவருடன் திமுகவைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் முத்துபெருமாள், நகரச் செயலர் பாண்டியன், முருகன், தலைவர் ஜெயமுருகன், பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் முகமதுயூனூஸ், மூ.மு.க. ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ஜி.செல்வராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலர் மதியழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பூவாலை தமிழ்வாணன், ரமேஷ், பாமக ஒன்றியச் செயலர் முடிவண்ணன் உள்ளிட்டோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.