அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

26 மார்., 2011

இந்திய - பாகிஸ்தான் மேட்ச் பார்க்க சர்தாரி, கிலானியை அழைத்த பிரதமர்!

Manmohan Singh and Gilaniடெல்லி: மொஹாலியில் புதன்கிழமை நடக்கும் இந்திய - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மற்றும் பிரதமர் கிலானிக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே போல மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி அரைஇறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது பாகிஸ்தான்.

இந்த இரு அணிகளும் மார்ச் 30ம் தேதி புதன்கிழமை சண்டிகர் அருகே உள்ள மொஹாலி மைதானத்தில் சந்திக்கின்றன. உலகமே ஆவலுடன் பார்க்கத் துடிக்கும் போட்டி இதுதான் என பத்திரிகைகள் வர்ணிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இந்தப்போட்டியைக் காண இந்தியாவுக்கு வருமாறு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோரை அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

இந்தப் போட்டியையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சண்டிகர், மொஹாலி மற்றும் இந்திய - பாதுகாப்பு எல்லையோரங்களில் சிறப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
free counters