இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் உளுந்தூர் பேட்டை வேட்பாளருமான முஹம்மது யூஸுஃப் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு வருகை தந்தார். அவர்களை மாநிலத் தலைவர் S.M.பாக்கர், துணைத் தலைவர் முனீர், துணைப் பொதுச் செயலாளர் ஸையது இக்பால் மற்றும் மாநிலச் செயலாளர் அபூஃபைஸல் ஆகியோர் வரவேற்றனர்.

அவர்கள் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டனர். இவர்களுடன் ஊடுகவியலாளர் அஹ்மது ஜவ்ஹர் அவர்களும் உடன் இருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பு முதன் முதலில் ஒரு முஸ்லிமுக்கு வாய்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று SDPI அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.