அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

6 ஏப்., 2011

ரூ.1 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கிறது தமிழகம்: ஜெயலலிதா

ராமநாதபுரம், ஏப். 5: ரூ.1 லட்சம் கோடி கடனில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர்பேசியது:
மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து மற்றும் கடும் மின்வெட்டு போன்ற காரணங்களால் தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப் போகிறீர்கள்? தேச விரோத சக்திகளோடு கூட்டணி சேர்ந்து செயல்படும் கருணாநிதி தமிழகத்தை ரூ.1 லட்சம் கோடி கடனில் தத்தளிக்க வைத்திருக்கிறார்.
ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற பொன்னான வாய்ப்பளிக்கும் நாள்தான், வர இருக்கும் தேர்தல் நாள். பேராசைக்காரக் கூட்டம் தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருப்பதைத் தடுக்கும் நாளாக அந்த நாள் இருக்க வேண்டும்.
எத்தனை கோடி என்றே கணக்கிட முடியாத அளவுக்கு மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் கருணாநிதியின் குடும்பமும் ஒன்றாகிவிட்டது. தனது குடும்ப வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தியவர்தான் கருணாநிதி.
தமிழகத்தில் திமுக கூட்டணி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். கருணாநிதியின் சூழ்ச்சியிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.
ஜனநாயக நாட்டில் தமிழகத்தைச் சுரண்டும் கும்பலை விரட்டியடிக்க தேர்தல் ஒன்றுதான் சிறந்த வழி என்பதால் வர இருக்கும் தேர்தல் நாளன்று அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.
பிரசாரத்தின் போது வேட்பாளர்களுக்கு என தனியாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றிருந்த அதிமுக வேட்பாளர்களான டாக்டர் எஸ்.சுந்தரராஜ் (பரமக்குடி), குணசேகரன் (மானாமதுரை), மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா (ராமநாதபுரம்), தேமுதிக வேட்பாளர் முஜ்புர் ரகுமான் (திருவாடானை) ஆகியோரின் பெயர்களைச் சொல்லி வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
முதுகுளத்தூரில் பிரசாரம்: முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மு.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது:
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் அரிசிக் கடத்தல், விலைவாசி உயர்வு, மின் வெட்டு போன்ற மக்கள் விரோதக் கொடுமைகளை விரட்டும் நேரம் வந்துவிட்டது. போராட்டம் மூலம் வெள்ளையர் ஆட்சியை விரட்டியது போல் தமிழ்நாட்டில் தேர்தல் மூலம் கொள்ளையர் ஆட்சியை அகற்ற வேண்டும்
இஸ்லாமியர் புனித யாத்திரைக்கு அரசு உதவுவது போல், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் ஆகியோர் புனித யாத்திரைகளுக்கும் அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும் என்றார்.

free counters