சென்னை, ஏப்.11 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (ஏப்.13) நடக்கிறது. காலை
8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை இடைவிடாமல் ஓட்டுப்பதிவு நடைபெறும்.
தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த தேர்தல் பிரசாரம் இன்று (திங்கள்) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் இறுதி கட்ட ஓட்டு வேட்டை நடத்தினார்கள்.
முதலமைச்சர் கருணாநிதி தான் போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் இன்று காலை முதலே கிராமம், கிராமமாக சென்று ஆதரவு திரட்டினார். அ.தி. மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சென்னையில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தான் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியில் இறுதி கட்ட பிரசாரம் செய்தார். இன்று மாலை 5 மணிக்கு பிரசாரம் முடிந்ததும் 234 தொகுதிகளின் எல்லைகள் சீல் வைக்கப்படும். தொகுதிகளுக்குள் வெளிநபர்கள் யாரும் தங்கி இருக்கக் கூடாது என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக திருமண மண்டபங்கள், விடுதிகளில் அதிரடி சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் பிரசாரம் முடிந்ததும் ஒவ்வொரு கட்சியினரும் வீடு, வீடாக சென்று பூத் சிலிப் கொடுத்து ஆதரவு திரட்டுவது வழக்கம். இந்த தடவை பூத் சிலிப்பை தேர்தல் கமிஷனே கொடுத்து விட்டது. என்றாலும் நாளை வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் வீடு, வீடாக சென்று அமைதியான முறையில் ஆதரவு திரட்டலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு மேலும் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை 5 மணிக்கு பிறகு யாரும் பொதுக் கூட்டம் நடத்தக்கூடாது. சினிமா தியேட்டர்கள், தொலைக்காட்சிகளில் தேர்தல் தொடர்பான எந்த விளம்பரமும் ஒளிபரப்பு செய்யக் கூடாது. நாளை நாடகம், கச்சேரி, உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நடத்தி மறைமுக பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
இதை மீறுபவர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷனால் வழங்கப்பட்டிருந்த வாகன அனுமதி சீட்டுகள் இன்று மாலை 5 மணிக்கு பிறகு செல்லாது. ஓட்டுப்பதிவு தினத்தன்று வேட்பாளர், அவரது ஏஜெண்டு, மற்றும் ஒரு வாகனத்துக்கு என வாகன அனுமதி சீட்டு கொடுக்கப்படும். அதை பயன்படுத்தி தான் வேட்பாளர்கள் செல்ல வேண்டும்.
இன்று முதல் மே மாதம் 10ஆம் தேதி வரை கருத்து கணிப்புகளை நடத்தவோ, வெளியிடவோ கூடாது. ஓட்டுப்பதிவு தினத்தன்று வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கட்சிகள் சார்பில் அலுவலகங்கள் அமைத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த அலுவலகங்களில் 2 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் செயல்படுத்த தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்புக்கும், அதிரடி சோதனைகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக மேலும் 4 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் இன்று முதல் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நிலை ராணுவத்தினர் சோதனை நடத்தும் பணிகளை செய்து வருகிறார்கள். சந்தேகப்படும் இடங்கள் அனைத்திலும் சோதனை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.
ஓட்டுப்பதிவின் போது சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று மாலை 5 மணி முதல் 13-ந் தேதி மாலை 5 மணி வரை மூடப்பட்டு இருக்கும். தனியார் மதுபான பார்களையும் மூட உத்தர விடப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு ரகசியமாக பணம் கொடுத்தது தெரிய வந்தாலோ அல்லது சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினாலோ தேர்தலை ஒத்தி வைக்க தயங்க மாட்டடீம் என்று தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. ஓட்டுப்பதிவை திறம்பட நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தொடங்கி உள்ளன. ஓட்டுப் பதிவுக்காக தமிழ் நாடு முழுவதும் 54 ஆயிரத்து 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4.5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். எல்லா வாக்குச் சாவடிகளிலும் மின்னணு எந்திர ஓட்டுப்பதிவு நடைபெறும்.
மின்னணு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டு தயாராக உள்ளன. இன்று மாலை முதல் இந்த எந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் பணிகளில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக அவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களில் யார்-யாரை எந்தெந்த வாக்குச் சாவடிகளுக்கு அனுப்புவது என்பது இன்று மாலை குலுக்கல் மூலம் முடிவு செய்யப்படும்.
இந்த விவரம் நாளை தேர்தல் பணியாளர்களுக்கு தெரிவிக்கப்படும். அதை ஏற்று நாளை (ஏப்.12) மாலையே தேர்தல் பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் வாக்குச் சாவடிகளுக்கு சென்று தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். மொத்தமுள்ள 54 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பெரும் பாலான தொகுதிகள் பதற்ற மானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான தொகுதிகளில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.
ஓட்டுப்பதிவு வெப்- காமிரா மூலம் கண் காணிக்கப்படும். இந்த தடவை இரண்டு ஆவணங்களை கொண்டு ஓட்டுப் போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டி வாக்களிக்கலாம். அல்லது புகைப்படத்துடன் அச்சிட்டு கொடுக்கப்பட்டுள்ள பூத் சிலிப்பை காட்டி ஓட்டுப்போடலாம். 13ஆம் தேதி மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு நிறைவு பெறும்.
உடனடியாக மின்னணு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் இடங்களில் அரசியல் கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் கண்காணிப்புக்காக தங்கி இருக்க அனுமதிக்கப்படும். சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். 11 மணிக்குள் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது தெரிந்து விடும்.