அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

12 ஏப்., 2011

புதிய வரலாறு படைக்க மக்கள் தயாராகிவிட்டனர்: ஜெயலலிதா

சென்னை, ஏப். 11: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய வரலாறு படைக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
 இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் எப்போது வரும் என்று மிகுந்த ஆவலோடும், எதிர்பார்ப்போடும் தமிழர்கள் காத்துக் கொண்டிருந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாள் ஏப்ரல் 13. வாக்குப் பதிவு எந்த நாள் வரும் என தமிழக மக்கள் காத்துக்கொண்டிருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.
 கடுமையான விலை உயர்வு, ஏழை மக்கள் மட்டுமல்லாமல் நிரந்தரமான மாதச் சம்பளம் பெறுபவர்கள் கூட நிறைவான வாழ்வு வாழ முடியாத வண்ணம் எல்லா வகையான செலவுகளும் பலமடங்கு உயர்ந்துவிட்டன. சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது.
 உலக அரங்கில் நம் நாட்டுக்கே தலைக்குனிவை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் குறித்த புதுப்புது செய்திகள் உச்ச நீதிமன்றத்தில் இருந்தும் பல்வேறு அரசு அமைப்புகளிடமிருந்து வருவதை ஒவ்வொரு நாளும் படித்து இதற்கெல்லாம் நீதி சொல்லும் நாள் என்றைக்கு வருமோ என்று எல்லோரும் காத்திருந்தார்கள், அந்த நாள் தான் ஏப்ரல் 13. ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் வாக்குகள் வழியாக சொல்லும் தீர்ப்புதான், மற்ற தீர்ப்புகளுக்கெல்லாம் முன்னோடியான தீர்ப்பு.
 கடந்த 19 நாள்களாக தமிழகத்தில் நான் மேற்கொண்ட தேர்தல் பிரசாரப் பயணத்தில் மிகுந்த எழுச்சியோடும் நம்பிக்கையோடும் மக்கள் அளித்த வரவேற்பைப் பார்த்தபோது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய வரலாறு படைக்க மக்கள் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.
 அதிமுக ஆட்சியில் தொழில்துறை மின் தட்டுப்பாடு இன்றி, ஆளும் கட்சியினர் அராஜகத் தொல்லைகள் இன்றி வளர்ந்து வந்தது. அத்தகைய பொற்கால ஆட்சி மீண்டும் மலர அதிமுக தொண்டர்கள் கட்டுப்பாட்டோடு தேர்தல் பணியாற்றி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
 உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 86 லட்சம் விவசாயக் குடும்பங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்த பெருமை அதிமுக ஆட்சிக்கு உண்டு. அத்தகைய நிம்மதியான வாழ்வு தமிழக விவசாயிகளுக்கு மீண்டும் அமைய அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வருவது மிகவும் அவசியம்.
 எல்லாவற்றையும் விட நாடு பெரிது. நாடு நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்ற பரந்த மனதுடன் ஜனநாயகக் கடமையாற்ற, வாக்காளர் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
 வாக்குப்பதிவு அன்று ஒவ்வொருவரும் குடும்பம் குடும்பமாகச் சென்று உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். தேவையான ஆவணங்களுடன் சென்று, கால தாமதத்துக்கு இடமின்றி - வாக்குப் பதிவு இயந்திரம் செயல்படும் விதத்தை நன்கு புரிந்துகொண்டு - உங்கள் வாக்குகளை உறுதியாகப் பதிவு செய்யுங்கள். அதன் மூலம்தான் கள்ள வாக்குகளையும் மோசடி வாக்குப் பதிவுகளையும் தவிர்க்க முடியும்.
 ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் தொழில் துறையிலும், விவசாயத்திலும், கல்வியிலும் மாநில உரிமைகளை நிலைநாட்டுவதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பிலும், மகளிர் மேம்பாட்டிலும் முன்னேற்றப் பாதையில் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றியமைக்கவும் மீனவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக சந்தித்து வந்த தொல்லைகள் நீங்கவும் இந்தத் தேர்தல் நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு' என்று
 ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
free counters