உலக கோப்பை போட்டி அடுத்து ஐ.பி.எல். போட்டி என வீரர்கள் தொடர்ந்து ஆடி வருவதால் களைப்புடன் உள்ளனர். எனவே எங்களுக்கு ஓய்வு வேண்டும் என்று பல வீரர்கள் கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டு உள்ளனர்.
இதனால் கேப்டன் டோனி, தெண்டுல்கர், ஷேவாக், காம்பீர், ஜாகீர்கான், ஹர்பஜன்சிங் ஆகிய 6 வீரர்களுக்கு ஓய்வு அளிக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் ஷேவாக் தவிர மற்ற 5 வீரர்களும் ஒருநாள் போட்டியில் மட்டும் ஆட மாட்டார்கள்.
ஷேவாக் தொடர் முழுவதும் விளையாட மாட்டார். 6 வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை அனுப்ப உள்ளனர். ஐ.பி.எல். போட் டிகளில் சிறப்பாக ஆடி வரும் வல்தாட்டி, அம்பத்தி ராயுடு ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோனி ஆடாததால் ஒருநாள் அணிக்கு யுவராஜ்சிங் கேப்டனாக நியமிக்கப்படுவார் என தெரிகிறது.