அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

19 ஏப்., 2011

இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் சொல்கிறார்


இந்திய அணியில் கங்குலியே சிறந்த கேப்டன்; அசாருதீன் சொல்கிறார்

இந்திய அணி முன்னாள் கேப்டன் அசாருதீன் கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இந்திய கிரிக்கெட் அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது அணியின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். அவருடைய சிறப்பான முயற்சியின் காரணமாக இந்திய அணி வெற்றிகளை குவித்தது. அணியை ஒவ்வொரு நிலையிலும் உயர்த்தினார்.  
 
இந்திய அணிக்கு இதுவரை இருந்த கேப்டன்களிலேயே கங்குலிதான் சிறந்த கேப்டன். இப்போது டோனி தலைமையிலான அணியும் சிறப்பான வெற்றிகளை பெற்று வருகிறது. இதற்கு கங்குலி அமைத்து கொடுத்த அடித்தளம்தான் முக்கிய காரணம்.
 
அதே நேரத்தில் கங்குலியை ஐ.பி.எல். அணிகள் ஏலம் எடுக்காதது குறித்து நான் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை. அணி நிர்வாகிகள் எடுக்கும் முடிவை பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது.   கிரிக்கெட் நிர்வாகத்தில் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெற்று இருப்பது சிறப்பு வாய்ந்தது.
 
கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் இருக்கும் வீரர்கள் செயல்பாடு பாராட்டும்படியாக இருக்கிறது. தெண்டுல்கர் எவ்வளவு காலம் விளையாடலாம் என்பதை நாம் சொல்ல முடியாது. எல்லாம் அவருக்கு தெரியும்.
 
இவ்வாறு அசாருதீன் கூறினார்.
free counters