அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

1 ஏப்., 2011

இலங்கைஇந்திய இறுதிப்போட்டிக்கு முன்னொருபோதுமில்லாத கடும் பாதுகாப்பு வான்,கடல் மார்க்கங்களில் கடும் கண்காணிப்பு

world_cup
மும்பை: இலங்கைஇந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையில் மும்பையில் வான்கடே விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை இடம்பெறும் உலகக் கிண்ண இறுதி கிரிக்கெட் போட்டியையிட்டு முன்னொருபோதுமில்லாத வகையில் பாரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வான் மார்க்கத்திலும் கடல் மார்க்கத்திலும் கடுமையான கண்காணிப்புக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதேசமயம், போட்டி இடம்பெறும் விளையாட்டரங்கைச் சூழ ஆயிரக்கணக்கான பொலிஸார் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியாவுக்கு வருகைதந்தபோது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை விட இது அதிகமானதெனக் கூறப்படுகிறது.
பார்வையாளர்களாக பயங்கரவாதிகள் சிலர் விளையாட்டரங்கிற்குள் ஊடுருவக்கூடுமென்ற அண்மைய அறிக்கைகளைப் பரிசீலனைக்கு எடுத்து அதற்குச் சந்தர்ப்பம் வழங்காத விதத்தில் கடும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மும்பை பொலிஸார்,மாநில ரிசேர்வ் பொலிஸ்படை, துரித நடவடிக்கைப் படை, உள்ளூர் ஆயுதப்பிரிவு, கொமாண்டோக்கள், மத்திய கைத்தொழிற்துறை பாதுகாப்புப் படை, துரித நடவடிக்கைக் குழு உள்ளடங்கலாக மும்பையில் பாதுகாப்புத் துறையினர் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, தேசிய பாதுகாப்புப் படையின் பிரிவொன்றும் கறுப்புப்பூனை கமாண்டோக்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையும் விமானப்படையும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா? என்பது பற்றி கடும் விழிப்புடன் இருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
நிலைமையை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக நேற்று பிற்பகல் வான்கடே அரங்குக்கு உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீலும் உயர்மட்டப் பொலிஸ் அதிகாரிகளும் உள்துறை அமைச்சின் அதிகாரிகளும் சென்றுள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஆயிரக்கணக்கான பொலிஸார் அந்த விளையாட்டரங்கைச் சூழ பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால் அந்த இடம் கட்டுக்காவல் நிறைந்த கோட்டை போன்று காணப்படுகிறது. இதற்கு வெளியே பல அணிகளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விளையாட்டுப் போட்டியில் இலங்கைஇந்திய கிரிக்கெட் குழுக்களும் முகாமையாளர்களும் அதிகாரிகளும் அதிமுக்கிய பிரமுகர்களும் வருகைதருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாட்டரங்கிற்கு சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள தாஜ்மஹால் பலஸ்,ரவர் ஹோட்டலில் அதி முக்கிய பிரமுகர்கள் தங்கவைக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைஇந்திய கிரிக்கெட் குழுவினர் தாஜ் ஹோட்டலிலும் ரைடன்ட் ஒப்ரோய் ஹோட்டலிலும் தற்காலிகமாகத் தங்கியிருப்பார்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர். இந்த இரு ஹோட்டல்களுக்கு முன்னால் அரபிக் கடல் உள்ளது. கடந்த 2008 நவம்பர் 26 இல் இவை இலக்கு வைக்கப்பட்டிருந்தன. கடல்மார்க்கமாகவே பயங்கரவாதிகள் ஊடுருவி வந்து தாக்குதலை நடத்தியிருந்தனர். விளையாட்டரங்கும் கடலுக்குச் சமீபமாகவே உள்ளது. இதனையடுத்தே அதிகாரிகள் வான் மார்க்க கடல்வழிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.
நகரப் பொலிஸ் விசேட பிரிவு, மாநில புலனாய்வுத் திணைக்களம், புலனாய்வுப்பிரிவு,பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு போன்ற பாதுகாப்பு முகவரமைப்புகளும் ஒருங்கிணைந்து செயற்படுகின்றன. மும்பையில் மாத்திரம் சுமார் 500 பொலிஸ் உதவி இன்ஸ்பெக்டர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். இதனைவிட நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள முக்கியமான பாலங்கள்,மேம்பாலங்கள்,சகல நுழைவாயில்கள்,வெளியேறும் பாதைகள் போன்றவற்றிலும் 24 மணிநேரமும் ரோந்துச் சேவையும் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நகர மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள ஹோட்டல்களில் சோதனைகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.
free counters