அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

4 ஏப்., 2011

திமுகவின் அரசியல் வரலாறு முடிவுக்கு வரும்: தா.பாண்டியன்

இத்தேர்தலோடு திமுகவின் அரசியல் வரலாறு முடிவுக்கு வந்துவிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா. பாண்டியன் கூறினார்.
 ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஏ. அஸ்லம் பாஷாவை ஆதரித்து, ஆம்பூர் புறவழிச் சாலையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது தா. பாண்டியன் பேசியது:
 திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக் களமாகவும், கொள்ளையடிக்கப்படும் வேட்டை காடாகவும் மாறியுள்ளது. இந்த நிலையை மாற்றும் கடமை வாக்காளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
 மத்திய அமைச்சர் ஆ. ராசா விவகாரத்தில் மக்கள் கொடுத்த வாய்ப்பை திமுக முறைகேடாகப் பயன்படுத்தியதின் விளைவாக தமிழகம் தலைகுனியும் அளவுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியை சிதைக்க கருணாநிதி சகல தந்திரங்களையும் பயன்படுத்திவிட்டார். கட்சிகளையும் விலைக்கு வாங்க முயற்சித்தார். சினிமா நடிகர்களை வேண்டுமானால் விலைக்கு வாங்கி விடலாம். ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை விலைக்கு வாங்க முடியாது.
 அதிமுக கூட்டணி மகா மக்கள் சக்தி கூட்டணியாகும். இந்த ஜென்மம் மட்டுமல்ல ஏழு ஜென்மம் எடுத்தாலும் கருணாநிதியால் அதிமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என்றார் பாண்டியன்.
 மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலர் ப. அப்துல் சமத், அதிமுக நகரச் செயலர் எம். மதியழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலர் எஸ்.ஆர். தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
free counters