அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

6 ஏப்., 2011

"இந்தியா மீது வெறுப்பு வேண்டாம்": அஃப்ரிதி




இந்த உலகக் கோப்பையில் அஃப்ரிதி தலைமையில் பாகிஸ்தான் அணி அரை இறுதி வரை முன்னேறி எழுச்சி கண்டது. ஆனால், அரையிறுதியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து வெளியேறி பின் நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு கராச்சி விமான நிலையத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது பேசிய அணித்தலைவர் அஃப்ரிதி 
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்த கருத்து சரியல்ல. இதுகுறித்து அவர் என்னிடம் விளக்கம் தர முயன்றார். ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுபோன்ற நேரத்தில் அவர் இதை தவிர்த்து இருக்கலாம். 

இந்தியாவில் தயாராகும் இந்திப் படங்களை பார்க்கிறோம். அங்குள்ள "டிவி' தொடர்களை ரசிக்கிறோம். திருமணம் போன்ற மதச்சடங்குகளும், இங்கு போலத்தான் உள்ளது. ஆனால், இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடும் போது மட்டும், அதிகளவில் ஏன் வெறுக்கின்றீர்கள். இங்குள்ள மக்களின் மனநிலையை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. கிரிக்கெட் ஒரு விளையாட்டு தான்; இதனை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்.
என்று கூறி இருக்கிறார்.

free counters