அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

23 ஏப்., 2011

குஜராத் கலவரம்: "தெரிந்தே அனுமதித்தார் மோடி" மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு


2002 ல் நடைபெற்ற குஜராத் கலவரத்தின்போது, இந்து கலவரக் கும்பலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முதாமைச்சர் நரேந்திர மோடி அப்போது காவல்துறைக்கு உத்தரவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

சஞ்சீவ் பட் என்ற அந்த ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

2002 பிப்ரவரி 27 ல் கோத்ரா ரயில் எரிக்கட்ட பின்னர், உடனடியாக சட்டம் ஒழுங்கு குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட காவல்துறை அதிகாரிகளிடம், இஸ்லாமியர்களுக்கு எதிரான தங்களது கோபத்தை தீர்த்துக் கொள்ள இந்துக்களை அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

இதுபோன்ற (கோத்ரா ரயில் எரிப்பு) சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க, முஸ்லீம்களுக்கு இந்த முறை பாடம் கற்றுக் கொடுப்பதற்கான உத்தரவை சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளது என்று மோடி கூறினார்.

இந்துக்கள் மத்தியில் காணப்படும் மிக அதிக உணர்ச்சி கொந்தளிப்பு தவிர்க்க முடியாதது என்பதால், அவர்களை பழி தீர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

மேலும் குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவும் தனது விசாரணையை சரியாக நடத்தவில்லை என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாகவும் அந்த மனுவில் சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
free counters