அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

21 ஏப்., 2011

தமிழகத்தில் பல இடங்களில் மழை: வெப்பம் தணிந்தது


 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பத்தின் அளவு குறைந்தது.
நாளையும் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வுமையத்தின் தகவல் தெரிவிக்கிறது.
இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி தமிழகத்திலும், வட கர்நாடகாவின் சில பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் உக்கிரம் கடுமையாக இருந்தநிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் நண்பகலில் திடீரென பெய்த மழை வெப்பத்தின் அளவை தணித்தது.
தமிழகத்தின் உள்பகுதியில் மழையோ, இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து.
நேற்றும் சில பகுதிகளில் மழை பெய்தது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அதிகபட்சமாக 7 செமீ மழை பதிவானது.
free counters