தமிழகத்தில் மின்பற்றாக் குறையால் மக்கள் பெரும் துன்பங்களை சகித்து வருகின்றனர். மாணவர்களும், குழந்தைகளும், நோயாளிகளும் தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டால் அடையும் வேதனைகள் அளவற்றவை. ஏற்கனவே, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்குவதற்காக உள்நாட்டு மக்களையும், உள்நாட்டு சிறுதொழில் நடத்துவோரையும் அரசு மின்வெட்டால் வதைத்து வருகிறது.
இதனிடையே, ஐ.பி.எல். விளையாட்டுப் போட்டிகளுக்காக மிகப்பெரிய அளவில் மின்சாரத்தைச் செலவிடுவது ரோம்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதைக்கு ஒப்பானதாக உள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை இரவில் நடத்துவதற்குத் தடை விதித்து, மின்சாரத்தை சிக்கனப் படுத்த வேண்டும் என தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.