அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

4 ஏப்., 2011

நான் பார்த்த கேப்டன்களில் டோணி தான் பெஸ்ட்: சச்சின்

மும்பை: நான் இதுவரை பார்த்த இந்திய அணி கேப்டன்களில் டோணி தான் சிறந்த கேப்டன் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
Sachin Tendulkar
Getty Images
சச்சின் டெண்டுல்கர் கடந்த 21 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் உள்ளார். அவர் இதுவரை 6 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ளார். எனினும், டோணி தலைமையிலான இந்திய அணி தான் சச்சினின் நீண்ட கால கனவான கிரிக்கெட் உலக்க் கோப்பையை வென்றது.


இது குறித்து சச்சின் கூறியதாவது, 

இதுவரை நான் பார்த்த இந்திய கேப்டன்களில் டோணி தான் மிகச் சிறந்தவர். அவர் எப்பொழுதுமே விழிப்புடன் இருப்பார். அவர் நிலைமையை ஆராய்ந்து, எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்.

அவர் எப்பொழுதுமே பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் மூத்த விளையாட்டு வீரர்களுடன் தனித்தனியே அடிக்கடி ஆலோசனை நடத்துவார். 

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர் எந்த நிலையிலும் அமைதியாக இருப்பார் என்றார்.



ஓய்வு பெறும் திட்டமில்லை :சச்சின்


புதுடில்லி : தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் எதுவுமில்லை என இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஓய்வு பெறும் எண்ணம் இதுவரை என் மனதில் இல்லை. ஓய்வு பெறுவது என்று முடிவெடுத்து விட்டால் அதை மறைக்க விரும்பவில்லை. ஓய்வு பெறுவது என முடிவெடுத்துவிட்டால் அதனை உடனடியாக அறிவித்து விடுவேன் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாடுவதை இன்னும் அனுபவித்து விளையாடுவதாகவும் கூறினார்.
free counters