அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

19 ஜூன், 2011

கனிமொழியின் கடைசி நம்பிக்கை: உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு நாளை விசாரணை


புதுதில்லி, ஜூன்.19: திமுக எம்பி கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்ற சிறப்பு பெஞ்ச் நாளை விசாரணை நடத்த உள்ளது.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக 2 நீதிபதிகள் நேற்று அறிவித்தனர்.
இந்த நிலையில் 2ஜி ஊழல் வழக்கை தொடக்கம் முதலே கண்காணித்து வரும் ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான பெஞ்ச் கனிமொழியின் ஜாமீன் மனுவை நாளை விசாரிக்க உள்ளது.
2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி ஏறக்குறையை ஒரு மாதமாக திகார் சிறையில் உள்ளார். முன்னதாக அவரது ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றமும், பின்னர் தில்லி உயர்நீதிமன்றமும் நிராகரித்துவிட்டன. கனிமொழியின் கடைசி நம்பிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுதான்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பலனடைந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவிக்கு ரூ 200 கோடி பெறப்பட்டதாக கனிமொழி மீதும், சரத்குமார் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்கள் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் ஏகே.பட்நாயக் ஆகியோர் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் இதை விசாரிப்பதில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.
இதனால் நீதிபதி சிங்வி, நீதிபதி பி.எஸ்.செளஹான் ஆகியோர் கொண்ட பெஞ்ச் கனிமொழியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உள்ளனர்.
free counters