அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

19 ஜூன், 2011

காரைக்கால் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

காரைக்காலை அடுத்துள்ள படுதார்கொல்லை அருகில் உள்ள தமிழகப் பகுதியான கொட்டாரக்குடி கிராமத்தை சேர்ந்த ஆண்டன்குமார், வின் சென்ட்ராஜ் ஆகியோர், தங்களது உறவினரான ஞானபிரகாசம் என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சென்றனர்.

அவர்கள் நடுகலம்பேட் அருகில் தங்களுக்கு முன்பு சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த திரு-பட்டினத்தை சேர்ந்த ஹாஜாமெய்தீன் என்பவரது மோட்டார் சைக்கிள் மீது மோதி னார்கள். இதில் நான்கு பேர்களும் தூக்கி எறியப்பட்டு கீழே விழுந்ததில் பலத்த அடிபட்டது. அவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்தில் ஆண்டன்குமார் மற்றும் வின்சென்ட்ராஜ் ஆகியோ ருக்கு லேசான காயம் ஏற் பட்டதாகவும், ஞானப் பிரகாசம் மற்றும் ஹாஜா மெய்தீன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் நீண்ட நேரம் கழித்துதான் வந்ததாக கூறப்படுகிறது.


இதன்காரணமாக உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் ஞானப்பிரகாசம் மருத்துவமனையில் உயிரிழந்தார், ஆபத்தான நிலையில் இருந்த ஹாஜாமெய்தீனை மேல்சிகிச்சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லும்படி மிக நீண்ட நேரம் கழித்துதான் கூறிய தாகவும் கூறப்படுகிறது.

எனவே ஒரு உயிரை காப்பாற்ற முடியாமலும், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு உரிய சிகிச்சையை உரிய நேரத்தில் வழங்காமல் டாக்டர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து காரைக் கால் மாவட்ட த.மு.மு.க சார்பில் காரைக்காலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலு வலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
 
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம், மாவட்ட துணைத்தலைவர் ஷாஜகான், நகர தலைவர் சிக்கந்தர், நகரசெயலாளர் நஜிமுதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் நியாஜ்அகமது உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து மாவட்ட சார்பு கலெக்டர் ஜெ.அசோக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது இன்னும் 3 நாட்களில் மருத்துவமனை அதிகாரிகளை அழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
 

நன்றி: நக்கீரன்
free counters