அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

24 பிப்., 2011

கூட்டணி குறித்து அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தை


சென்னை, பிப்.24: நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதுகுறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கை:


நடைபெற உள்ள 2011 சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறும் வகையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் இன்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. 

இந்தப் பேச்சுவார்த்தையில், அதிமுக சார்பில், தொகுதி பங்கீட்டுக் குழு உறுப்பினர்களான ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், பொள்ளாச்சி வ. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக சார்பில், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், பொருளாளர்  ஆர். சுந்தர்ராஜன், இளைஞர் அணிச் செயலாளர்  எல்.கே. சுதீஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக அதிமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
free counters