சென்னை: அதிமுக கூட்டணியில் ;மனிதநேய மக்கள் கட்சிக்கு ஆம்பூர், ராமநாதபுரம், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன,
சமத்துவ மக்கள் கட்சிக்கு தென்காசி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளும்,
டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகத்துக்கு திருச்சுழி தொகுதியையும்,
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் 'இரட்டை மெழுகுவர்த்தி' சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அதே போல செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதியையும், தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவைக்கு பரமத்திவேலூர் தொகுதியையும் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.
இன்று ஜெயலலிதாவுடன் இந்தக் கட்சி நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து இந்தத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
அதே போல பார்வர்ட் பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை அதிமுக தர சம்மதித்துள்ளதாக அதன் தலைவர் பி.வி.கதிரவன் தெரிவித்துள்ளர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் போட்டியிடுவதற்காக அந்தக் கட்சிக்கு அம்பாசமுத்திரம் தொகுதியை ஜெயலலிதா ஒதுக்கலாம் என்று தெரிகிறது.
தேமுதிகவைச் சேர்ந்த மைக்கேல் ராயப்பனுக்கு ராதாபுரம் தொகுதியை அதிமுக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரத்குமார் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால் இங்கு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை ஆலங்குளத்திற்கு மாறுவார் என்று தெரிகிறது. இத்தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பூங்கோதை போட்டியிடுகிறார்.
தென்காசியில் சரத்குமாரே போட்டியிடுவார் என்று தெரிகிறது.