அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

7 ஜூலை, 2011

காட்டுமன்னார்குடி காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

லால்பேட்டை இஸ்லாமிய மக்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் காட்டுமன்னார்குடி காவல்துறையை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 08.07.11.அன்று ;  வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு லால்பேட்டை கைகாட்டியில் லால்பேட்டை அனைத்து இஸ்லாமிய அமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அனைத்து இஸ்லாமிய அமைப்பு அனைத்து இஸ்லாமிய கட்சிகள் மற்றும் லால்பேட்டை இஸ்லாமிய போதுமக்கள் அறிவித்துள்ளார்கள்  

6 ஜூலை, 2011

இரண்டு நாள்கள் பத்திரிக்கைகள் புறக்கணிப்பு!!! லால்பேட்டை ஜமாஅத் அதிரடி....

கடந்த இரு தினங்களுக்கு முன்பு லால்பேட்டை காங்கிருப்பு பகுதியில் நடந்து கொண்டிருக்கும்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின்
போது,அந்த பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும்
பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றும், வேண்டுமென்றே
மோட்டார் சைக்கிளின் சப்தத்தை அதிகப்படுத்தி சொற்பொழிவுக்கு இடையுறு ஏற்படுத்தும்
வகையில் ஒழுங்கீனமாக நடந்துள்ளார்.
அவரின் இந்த செயலை அந்தப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் கண்டித்துள்ளனர்.உடனே முந்திக்கொண்ட ஆறுமுகம் காட்டுமன்னார்குடி காவல்நிலையத்தில் முஸ்லிம்கள் தம்மை சாமி கும்பிட அனுமதிப்பதில்லை என்றும் தம்மை வீடு புகுந்து தாக்க முனைந்தனர் என்றும் ஒரு புகார் ஒன்றை அளிக்கிறார்.
இதை போலவே ஜமாஅத் தரப்பிலிருந்து ஆறுமுகத்தின் மீதும் சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது
இடையுறு ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கீனமாக நடந்துள்ளார் என்றும் காட்டுமன்னார்குடிகாவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்படுகிறது.
இதனையடுத்து இந்த இரண்டு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலரைகாவல்துறை தேடி வருகிறது. இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் பெரும்பாலனோர்முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பதற்றம் அதிகரிக்காமல் இருக்க கான்கிருப்பு பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் தினமலர்,தினத்தந்தி,தினகரன் போன்ற பத்திரிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷதுடனும் சமூக ஒற்றுமையை குலைக்கும வகையிலும்,முஸ்லிம்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் செய்திகள் வெளியிட்டு வருவதை கண்டித்து,தினமலர்,தினத்தந்தி,தினகரன்

ஆகிய இம்மூன்று பத்திரிக்கைகளையும் நாளை , நாளை மறுநாள்,( 2,3 , ஜூலை ) இரு தினங்களுக்கு வாங்காமல் புறக்கணிக்க வேண்டுமென்று லால்பேட்டை ஜமாஅத் முடிவு செய்துள்ளது.


25 ஜூன், 2011

இலங்கை அரசைக் கண்டித்து துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் கைது (படங்கள்)




தொடர்ச்சியாக தமிழக மீனவர்களைக் கொடுமைப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும், தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் இலங்கை துணைத் தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

பாகிஸ்தானுக்கு எஸ்.எம். கிருஷ்ணா நன்றி


கடற்கொள்ளையரிடமிருந்து மீட்கப்பட்டு தில்லிக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை வந்த மாலுமிகளை வரவேற்கும் உறவினர்கள். (இடமிருந்து) என்.கே. சர்மா, பிரசாந்த்
புது தில்லி, ஜூன் 24: சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடித்து வைக்கப்பட்ட இந்திய மாலுமிகளை மீட்பதில் பாகிஸ்தான் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உரிய நேரத்தில் பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகவும் பாராட்டுக்குரியது, இந்தியர்களைக் காப்பாற்றியதற்காக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா குறிப்பிட்டார்.
22 பேரடங்கிய எம் வி சூயஸ் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் 10 மாதங்களுக்கு முன்பு கடத்திச் சென்றனர். இவர்களை மீட்பதில் பாகிஸ்தான் மனித உரிமை அமைப்பு மிக முக்கிய பங்காற்றியது. கொள்ளையர்கள் விடுவித்த பிறகு இவர்களை மீட்டு கராச்சிக்கு அழைத்து வருவதில் பாகிஸ்தான் கடற்படை மிக முக்கிய பங்காற்றியது. இவர்கள் அனைவரும் கடற்படையின் பாதுகாப்போடு வியாழக்கிழமை கராச்சிக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கிருந்து துபை வழியாக இவர்கள் நாடு திரும்பினர். இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியது மிகுந்த நிம்மதியை அளிப்பதாகக் குறிப்பிட்ட கிருஷ்ணா, உரிய சமயத்தில் பாகிஸ்தான் அரசு மிகச் சிறந்த உதவியை செய்துள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியர்கள் உள்ளிட்ட 22 பேர் மீட்கப்பட்டபோதிலும் இன்னமும் சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் 500-க்கும் அதிகமானோர் பிணைக் கைதிகளாக உள்ளனர். இவர்களை மீட்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று கிருஷ்ணா குறிப்பிட்டார். எம்.வி. சூயஸ் கப்பலில் இருந்த 6 இந்தியர்கள், 11 எகிப்தியர்கள், 4 பாகிஸ்தானியர்கள், ஒரு இலங்கையைச் சேர்ந்தவர் உள்ளிட்டோர் மீட்கப்பட்டனர். இவர்களை மீட்க 20 லட்சம் டாலர் பிணைத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
தில்லி திரும்பினர்: 10 மாதங்களாக கடற்கொள்ளையரின் பிடியில் சிக்கி மிகுந்த சிரமத்துக்குள்ளான இந்திய மாலுமிகள் வெள்ளிக்கிழமை காலை தில்லி திரும்பினர். இவர்களை வரவேற்க அவர்களின் குடும்பத்தினர் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். மாலுமிகளின் குழந்தைகள் அன்சார் பர்னி மாமாவுக்கு நன்றி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியிருந்தனர். மனித உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த அன்சார் பர்னி என்பவர்தான் சோமாலிய கடற்கொள்ளையரிடமிருந்து மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு திரும்பிய மாலுமிகளை வரவேற்க இந்திய அரசு சார்பில் எவரும் விமான நிலையத்துக்கு வரவில்லை.
தாங்கள் விடுதலையாவதில் இந்திய, பாகிஸ்தானிய ஊடகங்கள் பெரிதும் உதவியதாக விடுதலையானவர்களில் ஒருவரான ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்த ரவீந்தர் சிங் பூலியா தெரிவித்தார். தங்களை விடுவிப்பதில் இந்திய அரசின் பங்கு குறித்து தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் அவரது மனைவி சம்பாவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக உருண்டோடியது. இதனால் ஏற்பட்ட வலி என்றென்றும் நீங்காது என்று குறிப்பிட்டார்.
இத்தகைய மகிழ்ச்சியான தருணங்களுக்காக 10 மாதங்கள் காத்திருந்ததாக மற்றொரு மாலுமி பிரசாந்த் செüகான் குறிப்பிட்டார்.
எம்.வி. சூயஸ் கப்பலில் மீட்கப்பட்ட 22 பேரும் ஓமான் கடற்பகுதியிலிருந்து பாகிஸ்தானின் கடற்படை கப்பல் பிஎன்எஸ் ஜுல்பிகர் மூலம் கராச்சிக்கு அழைத்து வரப்பட்டனர். எம்வி சூயஸ்  கப்பல் எரிபொருள்தீர்ந்து போனதால் ஓமான் கடற்பகுதியில் நின்று போனது.
தங்களை மீட்பதில் பாகிஸ்தான் அரசு மேற்கொண்ட முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது என்று மற்றொரு மாலுமி என்.கே. சர்மா குறிப்பிட்டார். மீட்பு விஷயத்தில் இந்திய அரசு என்ன செய்தது என்றே தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் அரசு தங்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார். கடற்கொள்ளையர் பிடியில் இருந்தபோது, பெரும்பாலான நாள்களை பட்டினியில் கழித்ததாகக் குறிப்பிட்ட அவர், சில நாள்கள் வெறும் தண்ணீர்தான் தங்களுக்கு ஆகாரமாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டார்.  சில சமயங்களில் அரிசி சாதமும், வேகவைத்த உருளைக் கிழங்கும்தான் கிடைக்கும் என்று குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட மாலுமிகளின் குடும்பத்தினர் அனைவருமே அன்சார் பர்னிக்கு தாங்கள் மிகுந்த கடமைப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். அதேசமயம் இவர்களை மீட்பதில் இந்திய அரசு ஏதும் செய்யவில்லை என்ற ஆத்திரம் அவர்களது பேச்சில் தெரிந்தது.
அன்சார் பர்னிக்கு தான் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருப்பதாக சுரீந்தர் கெüர் குறிப்பிட்டார். இவர் மாலுமி சத்நாம் சிங்கின் தாயார்.
தனது தந்தை வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக என்.கே. சர்மாவின் 6 வயது மகள் நந்திதா குறிப்பிட்டார்.
தனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் ராகுல் காந்தி வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர் சம்பா. இந்த விஷயத்தில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது. அத்துடன் இதில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று கைவிரித்துவிட்டது. ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்களால் இது சாத்தியமாகியுள்ளது எப்படி என்று சம்பா கேள்வியெழுப்பினார். பொதுவாக பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக சித்தரிக்கும் நிலையில் அவர்கள் எங்களது குடும்பத் தலைவனை மீட்டுத் தந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட ஆறு இந்திய மாலுமிகள் விவரம்: என்.கே. சர்மா (ஜம்மு), ரவீந்தர் சிங் பூலியா (ரோஹ்தக்), சச்சின் (மும்பை), சத்நாம் சிங் (அம்பாலா), பிரசாந்த் செüகான், பிஜு (சிம்லா).
நன்றி ; தினமணி

22 ஜூன், 2011

ரஜினியை பார்க்க போன வடிவேலு விரட்டியடிப்பு!


rajani_vadvalu
ராணாவாவது காணாவாவது... என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து ரஜினி ரசிகர்களின் கோபத்தை(யும்) சம்பாதித்துக் கொண்ட வடிவேலு, மருத்துவமனையில் சிகிகிச்சை பெற்று வரும் ரஜினியை பார்க்கச் சென்றிருக்கார். ரஜினியின் நெருங்கிய விஐபி நண்பர்களையே உள்ளே அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் வடிவேலுவை மட்டும் விட்டுவிடுமா என்ன? விரட்டியடித்து விட்டார்களாம்.
திமுகவின் பிரசார பீரங்கியாக வலம் வந்தபோது சக நடிகர் என்றும் பாராமல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை வாய்க்கு வந்தபடி பேசியதன் விளைவாக ரஜினியின் ராணா படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த வடிவேலு, ராணாவாவது... காணாவாவது... தேர்தல் முடிவு வந்த பிறகு பாருங்கள், எத்தனை பேர் யார் காலில் வந்து விழப்போகிறார்கள் என்று... என்று தெனாவட்டாக கூறினார். வடிவேலுவின் போதாத காலம்... தேர்தல் முடிவில் திமுக வரலாறு காணாத தோல்வியை தழுவியது. திமுக இறங்குமுகமாக இருந்தபோதே வடிவேலுவின் வீடு மீது கல் வீசப்பட்டது. மர்ம நபர்கள் வடிவேலுவின் பண்ணை தோட்டத்தை நாசப்படுத்தினர். இதனால் சென்னை செல்லாமல் மதுரையிலேயே பதுங்கியிருந்தார் வடிவேலு.
நிலைமை சற்று அமைதியானதால் சென்னை சென்ற வடிவேலு, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  ரஜினியின் உடல்நிலையை விசாரிக்கச் சென்றுள்ளார். ஏற்கனவே கொதித்துப் போயிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். இந்த நேரத்தில் வடிவேலுவும் போய் நின்றால் என்னாகும்? ரஜினியை பார்க்க போன வடிவேலுவை துரத்தியடிக்காத குறையாக அனுப்பி வைத்தார்களாம். நல்லவேளையாக இவர் போயிருந்த நேரத்தில் ரசிகர்கள் பெருமளவு இல்லை. எப்படியோ உள்ளே சென்றவர், அண்ணனை பார்க்கணும் என்றதாகவும், பெரிய பெரிய ஆளுங்களையே உள்ள விடல. உங்களை எப்படி விட முடியும்? போயிட்டு வாங்க என்றார்களாம் மருத்துவமனை நிர்வாகத்தில்!  ரஜினி குடும்பத்தை பார்த்து சில வார்த்தைகள் விசாரித்துவிட்டு வரலாம் என்று நினைத்த வடிவேலுவுக்கு அதிலும் ஏமாற்றம்தான் மிஞ்சியதாம்!  என்னத்த சொல்ல...?
free counters